ல மணி நேரம் நாடு முழுவதும் மின் தடை!

இன்று பிரதமரை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார்

மின்சார சபை தலைவரும் இன்று இராஜினாமா?



நாடு பூராகவும் ஆறு மாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார்
நாடு பூராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால், நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. குறிப்பாக வைத்தியசாலை சேவைகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தன. நேற்று பிற்பகல் 2.44 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது.
பியகம உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் விளைவாகவே இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. அத்துடன் பல பகுதிகளில் நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது.
மேலும் வீதி சமிக்ஞை விளக்குகள் இயங்கவில் லை. இதன்காரணமாக பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோன்று ரயில் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதுமாத்திரமின்றி பெற்றோல் நிலையங்களும் ஹோட்டல்களும் மாலை பொழுதிலேயே மூடப்பட்டன. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று தடவைகள் நாடுபூராகவும் மின்விநியோகம் தடைப்பட்டது. இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் விநியோகம் தடைப்பட்டது.
இதன்படி கடந்த மாதம் 25ம் திகதி விக்டோரியா நீர்மின் நிலையத்தில் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இரண்டரை மணிநேரம் நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டது.
நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பாரிய மின்துண்டிப்பு ஏற்பட்டதனை அடுத்து இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் அதற்கான இராஜினாமா கடிதத்தை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளார். எனத் தெரிவிக்கப்படுகின்றது. மின் பொறியியல் துறையில் 20 வருட அனுபவத்தை பெற்ற இவர் , 2011 ஆம் ஆண்டு மின்சார சபையின் உபதலைவர் பதவியிலிருந்தமை குறிப்பிடதக்கது.
நாடு பூராகவும் ஆறு மாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார்.

மேலும் இன்று காலை 10 மணிக்கு அமைச்சில் விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தொடர் மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top