ஐக்கிய அரபு எமிரேட்டில் பலத்த காற்றுடன்
கன மழை
இயல்பு வாழ்க்கை
பாதிப்பு
ஐக்கிய
அரபு எமிரேட்சில்
பல இடங்களில்
பெய்த பலத்த
மழை மற்றும்
சூறாவளி காற்று
காரணமாக, சாலை
போக்குவரத்து மற்றும் விமான சேவை முற்றிலும்
முடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கன
மழை காரணமாக
சாலைகளில் பெருக்கெடுத்து
ஓடும் வெள்ளம்
காரணமாக துபாய்,
அபுதாபி நகர்களில்
பாடசாலைகள்
மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில்
மூழ்கியுள்ளன. சாலையில் ஆறு போல் ஓடும்
வெள்ள நீரில்
கார்கள் மிதக்கின்றன.
மரங்கள் வேரோடு
சாய்ந்து வருவதால்,
மக்கள் வீடுகளை
விட்டு வெளியே
வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மோசமான
வானிலை காரணமாகடுபாய் சர்வதேச
விமான நிலையத்தில்
விமான சேவை
பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் மின்சார
இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும்,
நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள்
மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன என்றும்
அறிவிக்கப்படுகின்றது. .
0 comments:
Post a Comment