பங்களாதேஷ்
நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்
வன்முறையில்
10 பேர் பலி!
பங்களாதேஷ்
நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5-ஆம் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற
தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில், 2 வேட்பாளர்கள்
உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷ் நாட்டின் 45 மாவட்டங்களில் உள்ள
717 ஊராட்சி ஒன்றியங்களில், பல்வேறு வன்முறைச் சம்பவங்கள்
மற்றும் முறைகேடு
புகார்களுக்கு இடையே சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
காமில்லா,
சிட்டகாங் ஆகிய
மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளில் கமாலுதீன், யாசின்
ஆகிய இரு
வேட்பாளர்கள் இறந்தனர். ஜமால்பூர் மாவட்டத்தில் இரண்டு
வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து,
போலீஸôர்
துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 4 பேர்
உயிரிழந்தனர்.
பேகம்கஞ்ச்
மாவட்டத்தில் ஆளும் கட்சியான அவாமி லீக்கின்
இளைஞர் அணித்
தொண்டர் ஒருவர்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே மாவட்டத்தில்
நடந்த வன்முறைச்
சம்பவங்களில் மேலும் இருவர் உயிரிழந்தனர். பிரமன்பாரியா,
முன்ஷிகஞ்ச் ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்த மோதல்களில்
ஏராளமானோர் காயமடைந்தனர்.
பங்களாதேஷ்
நாட்டின் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு, மூன்றரை மாதங்களுக்கு முன்பு
வெளியிடப்பட்டது. அப்போது முதல் நிகழ்ந்து வரும்
வன்முறைகளில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியாகி
விட்டது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment