கிழக்கு மாகாண முதலமைச்சர்
விவகாரம்
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து
கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவத்தில் சிலர் தம்மை தேசிய வீரர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றனர் என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடிய சம்பவம் தொடர்பில் குறித்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றமையானது இனவாதப் போக்கையே காண்பிக்கின்றது எனவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதமானது அனுமதிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் சிலர் அவருக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது அவர் வேறு இனத்தவர் என்ற காரணத்தாலேயே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினையானது இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடிந்த போதிலும் சிறுபான்மையினருக்கான எதிரிப்புக் காரணமாக சிலர் இன்று வீரர்கள் போல் இராணுவத்தினருக்கு சார்பாக பேசுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவத்தினருக்காக குரல் கொடுக்கும் இவர்கள் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை இழுத்துச்சென்று சிறைச்சாலையில் வைத்தபோது அவருக்காக ஏன் குரல் எழுப்ப முன் வரவில்லை எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.