வெள்ளத்தினால் சேதமடைந்த இலத்திரனியல்
உபகரணங்களை குப்பையில் வீசியெறிய வேண்டாம்!
வெள்ளத்தினால் சேதமடைந்த இலத்திரனியல் உபகரணங்களை குப்பையில் வீசியெறிய வேண்டாம் என்று அனர்த்த சேவைகள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் யாப்பா,
வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களை குப்பையில் வீச வேண்டாம். அவை சூழலுக்கு ஆபத்தானதாக அமையலாம்.
எனவே அவ்வாறான சேதமடைந்த கருவிகளை மீள்சுழற்சி மையத்தில் ஒப்படைக்கவும்.அதன் மூலம் சூழலுக்கு ஏற்ற வகையில் அவற்றை மீள்சுழற்சி செய்து பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment