ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்
நஸீர் அஹமதின் விடயத்தில்
சரியான முடிவை எடுத்தாக வேண்டும்.
மக்கள்
கோரிக்கை!
முட்டாளே, இங்கிருந்து
வெளியே போ. ஒழுங்கு முறையென்றால் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், வெளியே போ. என்னை
நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி தெரியாது, வாயை மூடு. என கடற்படை அதிகாரி ஒருவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றின் மேடையில் வைத்து கடுமையான தொனியில் திட்டியுள்ள விடயம்
பற்றி கட்சியின் தலைமைத்துவம் நாட்டு மக்ளின்
நன்மதிப்பைப் பெற சரியான ஒரு முடிவு எடுக்க
வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.
இஸ்லாத்திற்கு விரோதமான இவரின் இந்த செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடற்படையும் இவருக்கு எதிராக தீர்மானங்களை எடுத்துள்ளது. ஜனாதிபதிக்கும் இவரின் செயல்பாடு குறித்து அறிக்கை வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஹாபிஸ் நஸீர் அஹமதின் விடயத்தில் சரியான ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். என மக்கள்
கோரிக்கைவிடுக்கின்றனர்.
இல்லையேல் ஹாபிஸ் நஸீர் அஹமதின் செயல்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்துக் கொண்டிருப்பதாகவே முடியும். இதுமாத்திரமல்லாமல் பெரும்பான்மை
சமூகத்தினரினதும் குறிப்பாக மஹிந்த தரப்பினரினதும்
எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்கட்டப்படுகின்றது.
அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னண்டோ, அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்விலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் பெர்ம்பாலான மக்களின் கண்டனத்தைப் பெறும்
வகையில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னண்டோ முதமைச்சரை அமைதிப்படுத்தியும் அவர் அமைதிப்படவில்லை.
'முட்டாளே, இங்கிருந்து வெளியே போ. ஒழுங்குமுறையென்றால் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், வெளியே போ. என்னை நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி தெரியாது, வாயை மூடு.
(ஆளுநரைப் பார்த்து) ஆளுநரான நீங்களும் கூட, ஒழுங்குமுறை என்னவென்று தெரிந்திருக்கவில்லை. மரியாதைக்குரிய தூதுவரை நான் மதிக்கிறேன். ஆனால் ஒழுங்குமுறை உள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஆளுநரே, ஒழுங்குமுறையென்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்'
என, அந்தக் கடற்படை அதிகாரியையும் ஆளுநரையும் பார்த்து, முதலமைச்சர் வசைபாடுவது பதிவாகியுள்ளது
வீடியோ.............
.
0 comments:
Post a Comment