சிரித்துக்கொண்டே கொடூர ஆட்சி செய்யும் கிழக்கு மாகாண ஆளுநர்!
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ்
நஸீர் அஹமத் தெரிவிப்பு
சிரித்துக்கொண்டு
அதி கொடூரமான ஆட்சியை செய்த ஆளுநர்
ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை தமக்கு
இருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்
அஹமத் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்பிருந்த ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவின் கொடூரமான ஆட்சி, மகிந்த ராஜபக்சவினுடைய கொடூரமான ஆட்சி, அதற்குள் சிறுபான்மை சமூகத்தினர் அடக்குமுறைக்குள் உட்படுத்தித்தான் ஆளப்படவேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ள அந்த கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு இன்று வந்துள்ள ஆளுநரும், சிரித்துக்கொண்டு அதைவிட மோசமாக செய்கின்ற ஆளுநராக இருப்பதை நானும் சிரித்துக்கொண்டு இல்லை என்று கூற வேண்டும்.
மாகாணத்தில் பிரச்சினை இருக்கிறது. முன்னர் திஸாநாயக்க என்றொரு செயலாளர் இருந்தார். எந்தவொரு மாகாணத்திலும், இல்லாத ஒரு விடையம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பொதுவான ஒரு பணி. அந்தப்பணிக்கு செயலாளராக இருக்கின்ற ஒருவரை எவ்வாறு நீங்கள் கல்வியமைச்சுக்கு செயலாளராக்க முடியும் என்று பகிரங்கமாக நான் அவரிடம் கேட்டேன். இது தொடர்பாக அறைக்குள் வைத்தும் கேட்டுப்பார்த்தேன். அதற்கு சரிவரவில்லை. வீதியில் வைத்து கேட்கும் நிலை வந்தது.
ஆகவே இவ்வாறு சிரித்துக்கொண்டு கொடூரமான ஆட்சியை செய்கின்ற ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.