முஸ்லிம்கள் பற்றி டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய யோசனை !
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்க மறுப்பு
அமெரிக்காவுக்குள்
முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்
என்று அந்நாட்டு
ஜனாதிபதி பதவி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்
தெரிவித்த யோசனை
குறித்து இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடி கருத்து
தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தேர்தல்
பிரசாரத்தில் முன்வைக்கப்படும் விஷயங்களுக்கு
ஓர் அரசு
(இந்திய அரசு)
முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் அவர்
கூறியுள்ளார்.
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்
போட்டியிடக் கூடிய வேட்பாளருக்கான தேர்வுப் பட்டியலில்
டொனால்டு டிரம்ப்
முன்னணியில் இருக்கிறார். தேர்தல் பிரசாரம் மற்றும்
அது தொடர்பான
விவாதங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மிகுந்த
சர்ச்சையை ஏற்படுத்திய
வண்ணம் உள்ளன.
குறிப்பாக,
அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தாற்காலிகத் தடை
விதிக்க வேண்டும்
என்று டிரம்ப்
முன்வைத்த யோசனைக்கு
சர்வதேச அளவில்
கடும் எதிர்ப்பு
கிளம்பியது. இது ஒரு ஆபத்தான யோசனை
என்று பிரிட்டன்
பிரதமர் டேவிட்
கேமரூன் கூறியிருந்தார்.
இதற்கிடையே,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த
மாதம் அமெரிக்கா
செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,
அந்நாட்டுப் பத்திரிகையான "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழுக்கு அவர்
சிறப்புப் பேட்டி
அளித்துள்ளார்.
அப்போது,
முஸ்லிம்கள் குறித்த டிரம்ப்பின் பேச்சு குறித்து
மோடியிடம் கேள்வி
எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்:
இதெல்லாம்
தேர்தல் பிரசாரத்தில்
முன்வைக்கப்படும் விவகாரங்கள். இதற்கு ஓர் அரசு
எப்படி பதில்
அளிக்க முடியும்?
தேர்தல்
பிரசாரத்தில் பல்வேறு விவகாரங்கள் முன்வைக்கப்படும். யார் என்ன சாப்பிடுகின்றனர்? யார் என்ன குடிக்கின்றனர்? என்றெல்லாம்கூட
பேசுவார்கள். அதுபோன்ற அனைத்து விஷயங்களுக்கும் நான்
எப்படி கருத்து
கூற முடியும்?
என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
0 comments:
Post a Comment