ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஜப்பானை சென்றடைந்தார்

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, G7 நாடுகளின் மாநாடு நடைபெறும் ஜப்பானின் தென் பகுதியில் அமைந்துள்ள தீவான நகோயாவை இன்று காலை சென்றடைந்துள்ளார்.
நகோயா விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோஜி மியூட்டோ, ஹிடேக்கி ஹோமுரா மற்றும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் தம்மிக்க கங்கானந் திஸாநாயக்க மற்றும் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
அதேவேளை ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி இன்று பிற்பகல் வியட்நாம் பிரதமரையும் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்தை நடத்த இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வர்த்தகத்துறை மற்றும் ஏனைய துறைகளை சேர்ந்த அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, இன்று பிற்பகல் வியட்நாம் பிரதமர் Ngyuyn Xuan Phuc   அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், ஜீ 7 மாநாட்டின் கலந்துரையாடவுள்ள நிரந்தர சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் சௌபாகியம் ஆகிய தலைப்புகளுடன் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
. ஜனாதிபதி ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புக்களின் வர்த்தக அமைப்பின் தலைவர் oyuki IshigeOnomichi Dockyard மற்றும் Onomichi Dockyard நிறுவனத்தின் தலைவர் டகாஷி நகாபே ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கு பெருமளவு பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த உச்சி மாநாடு இடம்பெறும் காலப்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top