அகில இலங்கை வை.எம்.எம்.. பேரவையின்
66வது ஆண்டு நிறைவு விழா

 (எஸ்.அஷ்ரப்கான்)


அகில இலங்கை வை.எம்.எம்.. பேரவையின் 66வது ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய நிருவாகத் தெரிவும் வருடாந்த பொதுக் கூட்டமும் நாளை சனிக்கிழமை (28) 9.30 மணிக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் மக்காரிம் தாஹா தெரிவித்தார்.
                                                                                                                                                                        
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சபா நாயகர், பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அவர்களும், கௌரவ அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.. ஹலீம் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இங்கு நடப்பு வருடத்தில் திறமைகளை வெளிக்காட்டிய மற்றும் பல்வேறு சமூக சேவைகளை நிலைநாட்டிய வை.எம்.எம்.. கிளைகளுக்கான பாராட்டுக்கள் நினைவுச்சின்னங்கள், கிளைத்தலைவர்கள் பாராட்டு என்பன அதிதிகளை கொண்டு சிறப்பாக நடைபெறவுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top