கிழக்கு முதலமைச்சரின் சம்பவம்!
புத்திசாலித்தனமாக பிரச்சினையைத்
தீர்த்திருக்கலாம்!
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன
கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரியைத் திட்டுவதைத் தவிர்த்து புத்திசாலித்தனமான முறையில் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் கடற்படையின் கிழக்கு மாகாண முகாமொன்றின் கட்டளை அதிகாரியை திட்டிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சம்பூர் கடற்படை முகாமான விதுர முகாமின் கட்டளை அதிகாரியை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டமையை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.
பொறுப்புள்ள ஒரு அரசியல்வாதி என்ற வகையில் குறித்த வைபவத்தில் முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்திருக்குமாயின் அதனை அவர் நாகரீமான முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம்.
அல்லது வைபவத்தின் பின்னர் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம். அதனை விடுத்து இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. எந்தவொரு அரசியல்வாதியும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.
குறித்த கடற்படை அதிகாரியை திட்டிய சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தை விடுவிப்பதில் கடற்படையினர் வகித்த பங்கை முதலமைச்சர் ஒருதடவை ஞாபகமூட்டிப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment