கிழக்கு முதலமைச்சர் மூக்குடைந்ததால் கோபப்பட்டாரா..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
பொதுவாக இலங்கை அரசியலில் எப் பிரச்சினை இடம்பெற்றாலும் அக் குறித்த நபரின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் அவரைப் புகழ்வார்கள் ஏனையவர்கள் இகழ்வார்கள்.சில விடயங்களை கவனத்திற் கொள்ளாது சென்றாலும் அனைத்து விடயங்களிலும் அப்படிருக்க முடியாது.சம்பூர் பாடசாலையொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு கடற் படை அதிகாரியுடன் நடந்த விதம் சில நாட்களுக்குப் பிறகு இனாவாதத்தின் தாயகமான தென்னிலங்கையில் மட்டுமல்லாது இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இக் குறித்த பாடசாலை கிழக்கு மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்டதென்பதால் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி இந் நிகழ்வை (கிழக்கு மாகாணத்தின் அனைத்து நிகழ்வுகளையுமல்ல) ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.இதே கருத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் இது பற்றிய தனது அறிக்கையிலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வை ஆளுநர் ஏற்பாடு செய்ததானது கிழக்கு மாகாண சபையை சிறிதேனும் கவனத்திற் கொள்ளாத செயலாகும் என்பதை மறுப்பதற்கில்லை.கிழக்கு மாகாண சபையை கவனத்திற் கொள்ளவில்லை என்றால் அது கிழக்கு மாகாணத்தின் அனைத்து மக்களையும் புறக்கணிப்பதாகவே அர்த்தம் கொள்ளலாம்.கிழக்கு மாகாண சபையை அவமானப்படுத்தும்,அதனது செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்தும் எச் செயலையும் அங்கீகரிக்க முடியாதென கூவித் திரியும் கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாண சபையை அவமானப்படுத்தும் அக் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருக்கக் கூடாது.இச் செய்தியை அறிந்தவுடன் இதனைக் கண்டிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு அங்கு சென்று அவமானப்பட்டுத் திரும்பிய பிறகு,அக் குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சபையை புறக்கணித்த நிகழ்வென கதையைப் பரப்பு இவ் விடயத்தை எதிர்கொள்ள விளைவது மு.காவின் சுய நல அரசியல் போக்கை எடுத்துக்காட்டுகிறது.கிழக்கு மாகாண ஆளுநரின் தலையீடுகள் பற்றி கிழக்கு முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுத் திரிவதால்,இதனைக் கூறி மக்களைத் திசை திருப்புவதும் மிக இலகுவானதாகும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு முதலமைச்சர் இச் சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ஆளுநரிடம் சாட்டிவிட்டு கடற் படை வீரர்கள் அப்பாவிகள் என்பதை நான் அறிவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதனை இவர் சாதாரணமாக கூறினாலும் இது மிகவும் ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒரு கருத்தாகும்.இக் கருத்தின் மறு வடிவம் “கிழக்கு முதலமைச்சர் ஆளுநர் மீது கொண்டுள்ள கோபத்தை அக் குறித்த கடற் படைவீரர் மீது காட்டியுள்ளார் என்பதாகும்.” யார் மீதோ கொண்ட கோபத்தை வேறு நபர் மீது காட்ட விளைவதை யாராக இருந்த ஏற்றுக்கொள்ள முடியாது.ஆளுநரிடம் நேரடியாக முரண்பட முடியாமையின் விளைவே குறித்த படை வீரரை விடாமல் ஏசியமையாகும்.இந்த இயலாமையையும் பாராட்டுவோரும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அதிலும் இக் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு சாதாரணமான நபருமல்ல மாறாக ஒரு படைத் தளபதியாவார்.எச் சந்தர்ப்பத்திலும் நெஞ்சை நிமிர்த்தி செல்லும் படை வீரர்களை வேறு நபர் மீது கொண்ட கோபத்தால் தலை குனியச் செய்ததை ஒரு போதும் ஏற்க முடியாது.மேலும்.கடற் படை வீரர்களை அப்பாவிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதானது அக் குறித்த படை வீரர் மீது எது வித தவறுமில்லை என்பதை கிழக்கு முதலமைச்சரே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்.இதனை ஆழ்ந்து விளங்கத் தெரியாத போராளிகள் எனக் கூறிக்கொண்டு திரிபவர்கள் சிலர் அவர் செய்ததை சரி என இக் கனம் கூட நிரூபித்துக்கொண்டிருப்பது வேடிக்கைக்குரியது.
இக் குறித்த நிகழ்விற்கு கிழக்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன.கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்ததாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.ஆளுநரின் செயலாளர் முதலமைச்சரின் செயலாளருக்கு இந் நிகழ்வுக்கு முதலமைச்சரின் வருகையை ஆளுநர் எதிர்பார்ப்பதாக அழைத்துள்ளதான ஒரு கடிதமும் உலா வருகிறது.இவ் அழைப்பை நிர்வாக முறைப்படி சரியாக நோக்கினாலும் முற்று முழுதாக ஒரு முதலமைச்சருக்குரிய கௌரவத்துடன் வழங்கப்பட்ட அழைப்பாக நோக்க முடியாது.முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைக்கும் எந்த வார்த்தைப் பிரயோகமும் அக் கடிதத்தில் இல்லாமை குறிப்பிடத்தக்கது.கிழக்கு முதலமைச்சரின் கருத்தொன்றில் இதற்கு முன்பு கிழக்கு முதலமைச்சரும்,கிழக்கு ஆளுநரும் கிண்ணியா நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளனர்.இதன் போதே கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு முதலமைச்சரை அழைத்து இந் நிகழ்வுக்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.இவ் அழைப்பு முறையைப் பார்த்தாலே அங்கு செல்லும் கிழக்கு முதலமைச்சருக்கு எத்தகையை மரியாத கிடைக்கும் என்பதை மட்டிட்டுக்கொள்ளலாம்.
########இது தொடர்பில் வெளிவந்த கருத்துக்களை வைத்து எனது ஊகம்######
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஆளுநர் குறித்த நிகழ்விற்கு குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம் தனது வருகை பற்றிக் குறிப்பிட்டிருந்தால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.இங்கு நாம் பெற்றுக்கொள்ளத் தக்க செய்தி அந் நிகழ்விற்கு முதலமைச்சரின் வருவார் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை என்பதாகும்.பொதுவாக பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு வருகை தரும் அதிதிகளை பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.முதலமைச்சரின் வருகை பற்றி அங்கிருந்தவர்கள் அறியாமல் இருந்தமையால் பாதுகாப்பு படை வீரர்களின் முழுக் கவனமும் அங்கு சமூகம் தந்திருந்த ஏனைய அதிதிகள் மீதிருந்திருக்கும்.இப்படி இருக்கையில் ஆளுநர் முதலமைச்சரை கண்டு மேடைக்கு வருமாறு அழைத்துள்ளார் (கிழக்கு முதலமைச்சரின் மதிப்பு ஆளுநர் கூப்பிட்டு செல்லும் நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயம்).ஒரு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதிதிகளை நோக்கி யார் சென்றாலும் அவர்களைப் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த அதிதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் தடுப்பது வழமை.கிழக்கு முதலமைச்சர் அதிதிகளை நோக்கிச் செல்லுகையில் முதலமைச்சரின் முகத்தைக் கவனியாது ஏனையவர்கள் போல நினைத்துக்கொண்டு அவரை அந் நேரத்தில் விலக்கிருக்க வாய்ப்புள்ளது.இவர் ஏற்கனவே உலங்கு வானூர்தியில் இடம் கேட்டும் இடம் கிடையாமலும்,ஏனைய அதிதிகள் வருவதற்கு முன் குறித்த இடம் சென்று காத்துக்கொண்டிருந்தமையால் மிகவும் உள வெறுப்புடன் வந்திருப்பார்.இவருக்கு இப்படி விலக்கும் போது வேறு எதனையும் சிந்திக்காது கோபம் வந்திருக்கும்.###############
இது ஒரு தற்செயலான சம்பவம் என்பதை அறிய சில விடயங்களை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு விலக்கிய படை அதிகாரியிடம் கிழக்கு முதலமைச்சர் தன்னை முதலமைச்சர் எனக் கூறி உள் நுழைந்தே தனது வைதலை ஆரம்பித்துள்ளார்.இதிலிருந்து முதலமைச்சர் என்றவுடன் குறித்த படை அதிகாரி எதுவும் பேசாது அனுமதித்துள்ளமை தெளிவாகிறது.இது இவர் முதலமைச்செரென அறியாமலேயே அக் குறித்த படை அதிகாரி விலக்கியுள்ள பொருளைத் தருகிறது.கிழக்கு முதலமைச்சரை அவமானப்படுத்தும் நோக்கில் அப் படை அதிகாரி நடந்திதிருந்தால் அவர் மிகவும் தைரியமாக இவ் விடயத்தை கையாண்டிருப்பார்.இக் குறித்த அதிகாரி தான் அறியாமல் பிழை செய்துள்ளதை ஏற்று மன்னிப்பும் கோருகிறார்.முதலமைச்சரே போருக்குச் செல்லும் கோழி போல குறித்த அதிகாரியை விடாமல் வைதார்.மனிதன் என்ற வகையில் பிழை நடப்பது வழமை.அதனை தனது ஆட்சி அதிகார மமதையில் கையாள விளைவது மிகவும் தவறானதாகும்.
அவர் இவர் செய்த போது வாய் மூடி இருந்தவர்கள் இப்போது ஏன் குதிக்கிறார்கள் என இலகுவாக கேள்வி கேட்க முடியும்.அவர்கள் இவர்கள் பிழை செய்து அதனை தான் செய்தால் பிழையாகாதா? யார் பிழை செய்தாலும் பிழை பிழை தான்.அதிலும் முஸ்லிம்கள் பண்பால் வளர்க்கப்பட்டவர்கலல்லவா..??
0 comments:
Post a Comment