கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம்
மாணவி மீது விழுந்த
அடிக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை
மனிதநேயம் உள்ளவர்கள்
சிந்தித்திருக்க வேண்டும் எனத் தெரிவிப்பு
சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வில் கடற்படை அதிகாரியை திட்டியமையை பெரிதுபடுத்திய ஊடகங்களுக்கு அங்கு நின்ற மாணவி மீது விழுந்த அடி கண்ணுக்குத் தெரியவில்லையா? என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வில் மேடையில் ஏறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை மிகவும் கோபமாக திட்டிக்கொண்டு திரும்பிய போது மேடையில் உதவி பெறுவதற்காக வந்து நின்ற மாணவச் சிறுமியின் கன்னத்தில் முதலமைச்சரின் கை வேகமாக அறைகிறது. இதனை பொருட்படுத்தாத முதலமைச்சர் கடற்படை அதிகாரியுடன் காரசாரமாக பேசிக்கொண்டிருக்கின்றார்.
ஆனால் மேடையில் நின்ற குறித்த மாணவியை விலகி நிற்குமாறு கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி அவர்கள் கூறுகின்ற காட்சி ஊடகங்களில் வெளியான காணொளியில் காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கடற்படை அதிகாரியை திட்டியமையை பெரிதுபடுத்திய ஊடகங்களும் முப்படை அதிகாரிகளும் ஏனைய அமைப்புக்களும் சிறுமியான அந்த மாணவி மீது விழுந்த அடிக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை என பொதுமக்கள் பலர் தங்களது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இவர்களின் அதிகாரச் சண்டைக்கு இடையில் அடிவாங்கிய அந்த சிறுமி குறித்தே மனிதநேயம் உள்ளவர்கள் சிந்தித்திருக்க வேண்டும் என்றும் கோரிக்கை
விடுக்கப்படுகின்றது.
வீடியோ.............
0 comments:
Post a Comment