ஆறு மாத பெண் குழந்தை
நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை!
அமெரிக்காவின்
தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண்
குழந்தை ஒன்று
நீர் சறுக்கு
விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது.
சைலா
(Zyla St Onge) என்ற அந்த பெண்
குழந்தை நடக்க
முடியாத போதிலும்
ஏரியின் குறுக்கே
நீர் சறுக்கு
பலகையை பிடித்தவாறு
209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க
வைத்துள்ளது.
தனது
முதலாவது நீர்
சறுக்கு முயற்சியின்
போது இந்தக்
குழந்தை 18.89 மீட்டர்கள் பயணித்துள்ளது.
இந்தக்
குழந்தையின் பெற்றோர் தொழில்முறை நீர் சறுக்கு
வீரர்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இதற்கு
முன்னர் பார்க்ஸ்
போனிஃபே ( Parks Bonifay) என்பவர் 6 மாதம்
29 நாட்களில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக
இருந்தது. அதனை
6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர
வித்தியாசத்தில் சைலா முறியடித்து விட்டாள்.
0 comments:
Post a Comment