அஜாக்கிரதை காரணமாக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா:

குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு தொடுக்க பொலிஸார் முடிவு

அமெரிக்கா நாட்டில் பெற்றோரின் அஜாக்கிரதை காரணமாக தான் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான்.
அப்போது, அங்குள்ள ஹரம்பே எனப்பெயரிடப்பட்ட கொரில்லா ஒன்று சிறுவனை தூக்கிச் சென்று சுமார் 10 நிமிடங்கள் போக்கு காட்டியுள்ளது.
இதனை கண்ட பாதுகாவலர்கள் குழந்தையை காப்பாற்றும் பொருட்டு கொரில்லாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
கொரில்லா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் தான் அது தன்னுடைய 17வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. கொரில்லாவை மயக்க ஊசி போட்டு குழந்தையை காப்பாற்றுவதற்கு பதிலாக சுட்டு கொலை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஓஹியோ பொலிஸார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், ‘பெற்றோரின் அஜாக்கிரதை காரணமாக தான் குழந்தை தவறி கொரில்லா அருகில் விழுந்துள்ளது.
குழந்தை கொரில்லா கையில் கிடைத்தவுடன் வேறுவழியின்றி அதனை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெற்றோரின் அலட்சத்தியத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top