கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தொடர்பில்
முஸ்லிம் காங்கிரஸ்
உயர்பீடம் கலந்துரையாடல்!
முட்டாளே, இங்கிருந்து வெளியே போ. ஒழுங்கு முறையென்றால் என்னவென்று
உனக்குத் தெரியாவிட்டால், வெளியே போ. என்னை நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி
தெரியாது, வாயை மூடு. என கடற்படை அதிகாரி ஒருவரை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நஸீர் அஹமத் மாணவர்கள் கலந்து கொண்ட
நிகழ்வு ஒன்றின் மேடையில் வைத்து கடுமையான தொனியில் திட்டியுள்ள விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்ட பீடம் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மேடையில் வைத்து கடற்படை வீரர் ஒருவரை அந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தூற்றிய காணொளி இணையங்களில் பரப்பப்பட்டுள்ளதுடன் .குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடற்படையும் இவருக்கு எதிராக தீர்மானங்களை எடுத்துள்ளது. ஜனாதிபதிக்கும் இவரின் செயல்பாடு குறித்து அறிக்கை வழங்கப்பட்டுள்ளது பிரதமரும் இந்த
விடயத்தில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்ட குழு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடற்படை வீரரை தாம் திட்டமிட்டு நிந்திக்கவில்லை என்பதோடு, எதேச்சையாக இடம்பெற்ற சம்பவம் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
குறித்த சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ
மற்றும் பொது பல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment