அதிக எடையுடன் அதிசய பெண் குழந்தை!

கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்கும்?


இந்தியாவிலுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு உலகிலேயே அதிக எடை கொண்ட பெண் குழந்தை  ஒன்று . பிறந்துள்ளது  இப்பிரசவம் டாக்டர்களை வியக்க வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தினி (19). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களில் கர்ப்பமானார்.
நந்தினி 4 மாத கர்ப்பமாக இருந்தபோதே வயிறு மிகவும் பெரியதாக இருந்தது. டாக்டர்கள் பரிசோதித்து, கரு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். மாதம் செல்லச்செல்ல வயிறு மிகவும் பெரியதாக மாறியது. இதனால் கவலைப்பட்ட நந்தினியை டாக்டர்கள் தேற்றினர்.
இந்நிலையில், நந்தினிக்கு கடந்த திங்கட்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரம்ப கட்ட சிகிச்சைப்பிறகு நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், குழந்தையை பார்த்த டாக்டர்கள் பிரமித்துப்போனார்கள். காரணம், அந்தக் குழந்தை எடை 6.8 கிலோவாக இருந்தது. சாதாரணமாக, பிரசவத்தின்போது குழந்தை எடை 3.4 கிலோதான் இருக்கும். ஆனால் இந்தக்குழந்தை 2 மடங்கு அதிக எடையுடன் இருந்தது மருத்துவ அதிசயமாகக் கருதப்படுகிறது. இந்த குழந்தைதான் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண் குழந்தை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இது குறித்து நந்தினிக்கு பிரவசம் பார்த்த டாக்டர்கள் கூறுகையில், ‘‘இது மிகப்பெரிய அதிசயம். எங்கள் அனுபவத்தில் இதுபோல் அதிக எடை கொண்ட குழந்தை பிறந்ததாக கேள்விப்பட்டது கூட இல்லை. நந்தினி உயரம் 5.9 அடி. கர்ப்ப காலத்தில் 94 கிலோ எடையுடன் அவர் இருந்தார். சாதாரணமாக பிறக்கும் குழந்தை 3.4 கிலோ எடை இருக்கும். ஆனால், நந்தினிக்கு பிறந்த குழந்தை 2 மடங்கு அதிகமாக உள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

1955ல் பிறந்த 10.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிக எடை கொண்ட பெண் குழந்தை என்ற ரீதியில் கின்னஸ் புத்தகத்தில் இந்த குழந்தையும் இடம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. .


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top