தமிழக அமைச்சரவையில்
பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில்

ஆய்வில் தெரிவிப்பு!



புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அமைச்சரவையில் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 4 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 24 பேர் கோடீஸ்வரர்கள். 17 பேர் பட்டதாரிகள். 29 அமைச்சர்களில் 2 பேர் மட்டுமே 40 வயதிற்கும் குறைவானவர்கள். எனவும்  ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு, வயது, கல்விதகுதி உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில்
 24 அமைச்சர்கள், கோடீஸ்வர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.55 கோடி. அதிக சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர்களில் முதல்வர் ஜெயலலிதா முதலிடத்திலும் (ரூ.113.73 கோடி),கே.சி.வீரமணி 2வது இடத்திலும் (ரூ.27.67 கோடி), பெஞ்சமின் 3வது இடத்திலும் (ரூ.23.02 கோடி) உள்ளனர். மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவரது சொத்து மதிப்பு ரூ.31.75 லட்சம்.
அமைச்சர்களில்பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களில் 4 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தலின் போது அவர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் 9 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
விலங்குகள் நலத்துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ண ரெட்டி மீது கிரிமினல் வழக்கு உள்ளது. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியர் தனது பணியை செய்ய விடாமல் தடுத்தது போன்ற வழக்குகள் உள்ளன.
இந்த 9 பேரில், 4 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபட்டது, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பால் வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் தங்களது பிரமாணப் பத்திரத்தில், தங்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
அதே போல, முதல்வர் ஜெயலலிதா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகன்டன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மற்றும் ரெட்டி ஆகியோர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
  புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 17 அமைச்சர்கள் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்களாகவும், 12 பேர் 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவான கல்விதகுதி உடையவர்கள்.

அமைச்சர்கள் வெளியிட்டுள்ள வயது விபரத்தின் படி, இரண்டு அமைச்சர்கள் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 17 அமைச்சர்கள் 41 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், 10 பேர் 61 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். மிகக் குறைந்த வயதுடைய அமைச்சர் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வி.எம்.ராஜலட்சுமி. இவருக்கு வயது 30. இவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top