சேட்டை செய்த சிறுவனை கரடிகள் அதிகமுள்ள
காட்டில் விட்ட பெற்றோர்!
சேட்டை செய்ததற்காக, பெற்றோரால், கரடிகள் அதிகமுள்ள காட்டில் விடப்பட்ட, 7 வயது சிறுவனை தேடும் பணி, ஜப்பானில் தீவிரமாக நடக்கிறது.
ஜப்பானின் வடக்கு பகுதியில், ஓக்காய்டோவில் உள்ள வனப் பகுதிக்கு அருகே உள்ள பூங்காவுக்கு, தன் மகள் மற்றும் மகனுடன், ஒரு தம்பதி சென்றிருந்தனர். அப்போது, யாமடோ தனுாகா என்ற அந்த சிறுவன், சேட்டை செய்துள்ளான். ஆத்திரமடைந்த அவனுடைய பெற்றோர், காரில் வீடு திரும்பும்போது, வனப் பகுதியில் அவனை இறக்கி விட்டுள்ளனர்.
சிறிது துாரம் சென்று அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, சிறுவனை காணவில்லை. உடனடியாக, பொலிஸில் புகார் கொடுத்தனர்.
விசாரணையின்போது, சேட்டை செய்ததால் தண்டனை கொடுக்க நினைத்து, இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து பொலிஸார், மற்றும் வனத்துறையினர் என, 180க்கும் மேற்பட்டோர் அந்த வனப் பகுதியில் தேடி வருகின்றனர்.
https://youtu.be/-nxP_hSKPUs
https://youtu.be/-nxP_hSKPUs
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.