கூட்டுத்தாபன மற்றும் அதிகார சபைகளின் ஊழியர்கள்
ஓய்வுபெறும்போது பாரிய அநீதி!

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் சார்பில்
வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு



அரசாங்கத்தின் கூட்டுத்தாபன மற்றும் அதிகார சபைகளின் ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பாரிய அநீதி இழைக்கப்படுவதாக வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் சார்பில் இது தொடர்பான அறிக்கையொன்றை வசந்த சமரசிங்க அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தின் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளின் ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவில் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது.
புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் அவ்வாறான ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது சுமார் மூன்று தொடக்கம் நான்கு இலட்சம் வரையான தொகையை ஓய்வூதியக் கொடுப்பனவிலிருந்து இழக்க நேரிடுகின்றது.
எனவே குறித்த சுற்றறிக்கையை உடனடியாக வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கம் அதனை ஏற்று, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் தொழிற்சங்கப் போராட்டம் நடாத்தப்படும் என்றும் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top