மரியாதை
கொடுக்கப் படவில்லை என்றால் மரியாதையாக
அவ்விடத்தை விட்டும் வெளியேறி இருக்க
வேண்டும்
-
மொஹிடீன் பாவாவின் கருத்து!
முதல் அமைச்சர் வெளியேறி இருந்தால் ஏன் முதல்
அமைச்சர் வெளியேறிச் செல்கிறார் என்ற ஒரு விசாரணை எழுப்பப் பட்டிருக்கும்
தற்போது மிகவும் பூதாகரமாக வெளிப் பட்டுள்ள கிழக்கு மாகாண
முதல் அமைச்சர் நடத்தை பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு தேசிய ஜனநாயக மனித
உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் பின்வருமாறு தனது கருத்தை கூறினார்
மரியாதை கொடுக்கப் படவில்லை என்றால் மரியாதையாக அவ் விடத்தை
விட்டும் வெளியேறி இருக்க வேண்டும் . மரியாதை கேட்டு வாங்குவதில்லை அது கொடுக்கப்
படவேண்டும் . அவ்வாறு வெளியேறி இருந்தால் ஏன் முதல் அமைச்சர் வெளியேறிச்
செல்கிறார் என்ற ஒரு விசாரணை எழுப்பப் பட்டிருக்கும் .சோனி முட்டிப் போட்டுத்தான்
குனிவான். ஆனால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் முதல் அமைச்சர். இச் செயலுக்கும் முஸ்லிம்களுக்கும்
ஒரு தொடர்பும் இல்லை . முஸ்லிம்கள் ஒரு விதமான மானம் இழக்கவும் இல்லை .
தான் முட்டியது மட்டும் அல்ல கிழக்கு மாகாண முஸ்லிம்கள்
எல்லோரையும் தன்னை போல முட்டச் சொல்கிறார் .
நிர்வாகத் திறமை அற்ற செயல்தான் இது. எவ்விடத்தில் எவ்வாறு
நடந்து கொள்ளவேண்டும் என்ற படிப்பினையை
இவர் (Diplomatic Behaviour) கற்க வேண்டும்.
0 comments:
Post a Comment