மனம் திறக்கின்றார் வெல்லம்பிட்டிய பதில் விகாராதிபதி!
வெள்ள அனர்த்த உதவிகள் 90 வீதமானவை பன்சலைகளுக்கு பள்ளிவாசல்கள் மூலமே கிடைத்தன. வெள்ளம் மூலம் முஸ்லிம்களுக்கும் எமக்குமிடையில் நல்லுறவு பலப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மேலும் உருவாக வேண்டும். அவற்றுக்கு முதல் சீமெந்து மூடையை நானே வழங்குவேன் என கொலன்னாவ சிடினாமலுவே வஜிரதேரர் தெரிவித்தமை நீங்கள் அறிந்ததே!
தொப்பி அணிந்த முஸ்லிம்களை நாம் கண்டால் முன்பு எமது மக்களுக்கு அச்சம் ஏற்படும். அவர்கள் எமது காணிகளை அபகரித்துக் கொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால் முஸ்லிம்கள் மனிதாபிமானமிக்கவர்கள். அவர்கள் பல்சலைக்கு எம்மைத் தேடிவந்து நிவாரண உதவிகளை வழங்கினார்கள். எமக்கு ஆறுதல் கூறினார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெல்லம்பிட்டிய பகுதியில் MFCD நிறுவனம் மேற்கொண்டுவரும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், சேவை தொடர்பில் வெல்லம்பிட்டிய பதில் விகாராதிபதி தேர்வுக்கும் கருத்தை இங்கு பார்க்கலாம்!
ANAS ABBAS
(வீடியோ இணைப்பு)
0 comments:
Post a Comment