உலகை உலுக்கும் புகைப்படம்:
மத்திய தரைக்கடலில் இருந்து சடலமாக
மீட்கப்பட்ட அகதி குழந்தை!



மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா,ராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தலால் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கதவை அடைத்துவிட்டன.
கிரீஸ் நாடுகளில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் துருக்கிக்கும் அவரவர் சொந்த நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். எனினும் ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னமும் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியாவில் இருந்து அகதிகளுடன் ஐரோப்பாவுக்கு புறப்பட்ட 3 கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் மூழ்கின. இதில் 700 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நேற்று ஒரு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மீட்புப் படை வீரர், கடலில் சடலமாக மிதந்த குழந்தையை மீட்டார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப் படம் சமூக வலைத்தளங் களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் அகதி களுக்கு மீண்டும் கதவைத் திறக்க வேண்டும், அதற்கான ஏற்பாடு களை .நா. சபை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தையின் உடலை மீட்ட ஜெர்மனி மீட்புப் படை வீரர் 3 குழந்தைகளுக்கு தந்தை. அவர் கூறியபோது, குழந்தை இறந்ததாக தெரியவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல இருந்தது. அந்த பிஞ்சு உடலை எனது கரத்தில் ஏந்தியபோது என்னையறியாமல் அழுதுவிட்டேன். அகதிகள் பிரச்சினைக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 8000 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top