உலகின் மிக நீளமான சுரங்க புகையிரதப் பாதை:
சுவிட்சர்லாந்தில் இன்று திறக்கப்படுகிறது!

         




சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி புகையிரதப் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் திகதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைக்கான வடிவமைப்பு முதன் முதலில் 1947-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார்.
காட்தர்டு பேஸ் Gotthard Base Tunnel சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி
இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி புகையிரதப் பாதையாக இருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகியுள்ள இந்த சுரங்க வழி புகையிரதப் பாதை அந்த பெருமைக்குரிய பெயரை பெற்றுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த புகையிரதப் பாதை ஐரோப்பிய நாடுகளில் ஒரு மிக்கியமான பாதையாக கருதப்படுகிறது.
சுவிஸின் Uri மாகாணத்தில் உள்ள Erstfeld என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி புகையிரதப் பாதை, Ticino மாகாணத்தில் உள்ள Bodio என்ற பகுதியில் நிறைவடைகிறது.
இன்று 1ம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இன்று 1ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top