பாகிஸ்தான் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின்போது
தற்கொலைப்
படைத் தாக்குதல்
25 பேர் பலி
30-க்கும் அதிகமானோர் படுகாயம்
பாகிஸ்தானில்
மசூதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஜும்ஆ தொழுகையின் போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில்
25 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில்
மசூதி ஒன்றில்
தொழுகையின் போது இன்று வெடிகுண்டு தாக்குதல்
நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பழங்குடியின
பகுதியில் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த
தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 25
பேர்
கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர்
படுகாயமடைந்தனர்.
மீட்புப்
பணிகள் நடைபெற்று
வருகிறது. வெடிகுண்டு
தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக பஜவுர் மாவட்ட
தலைமை மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதல்
குறித்து, அந்த பிராந்தியத்தின் உதவி
நிர்வாகஸ்த்தர் நவீட்
அக்பர் கூறுகையில்,
“மக்கள் கூட்டம்
அதிகம் இருந்த
மசூதியில் தற்கொலைப்
தாக்குதலை நடத்திய
நபர் இருந்தார்.
அல்லாஹு அக்பர் என்று
அந்த நபர்
முழக்கமிட்ட பின்னர் அங்கே குண்டு வெடித்தது”
என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்
பாதுகாப்பு படையினர் இது தற்கொலைப் படை
தாக்குதல் தான்
என்பதை உறுதி
செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment