நியூயோர்க்கில்
குண்டுவெடிப்பு:
25க்கும் மேற்பட்டோர்
காயம்
அமெரிக்காவின்
நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில்
25க்கும் மேலானோர்
காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்
நேரப்படி இரவு
8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில்
லோயர் மன்ஹாட்டன்
பகுதியில் ஆயிரக்கணக்கான
பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள
23வது தெருவில்
இந்த குண்டுவெடிப்பு
சம்பவம் நிகழ்ந்ததில்,
அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது, மேலும் பொலிஸ்
நாயின் உதவியுடன்
வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எதற்காக
இந்த சம்பவம்
நடந்தது? தீவிரவாத
தாக்குதலின் பின்னணியா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றன.
0 comments:
Post a Comment