66வது பிறந்த நாளை இன்று கொண்டாடும்
இந்திய பிரதமர் மோடி
தாயிடம் ஆசி பெற்றார்
நலத்திட்ட உதவிகள் வழங்கி கின்னஸ் சாதனைக்கும் முயற்சி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66வது பிறந்தநாளை இன்று (17-09-16) கொண்டாடுகிறார்.
இதற்காக குஜராத் சென்றுள்ள மோடி, காந்திநகரிலுள்ள இல்லத்திற்கு சென்று தனது தாய் ஹீராபாவை சந்தித்து ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் நவசாரி எனும் இடத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இதற்காக குஜராத் சென்றுள்ள மோடி பல்வேறு கின்னஸ் சாதனைகளுடன்
தனது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். மேலும் 1000 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கியும், 1000 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கியும் கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோடியின் பிறந்தநாளான இன்று மொத்தம் 4 கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டு கின்னஸ் சாதனைக்கு அனுப்பட்டது. ஆனால் போட்டோ, வீடியோ போன்ற உரிய ஆதாரங்கள் இல்லாததால் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment