அமெரிக்க
அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை
பொது பயன்பாட்டுக்கு திறப்பு
அமெரிக்காவில் உள்ள அருங் காட்சியகத்தில் நிர்மாணிக்கப்
பட்டுள்ள 18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அந்த கழி வறையை காண்பதற்காக தற் போது அருங்காட்சியகத்தில் கூட்டம் அலைமோதுவதாக
கூறப் படுகிறது.
நியூயார்க் நகரில் ககன்ஹேம் அருங்காட்சியகம் உள்ளது. இதன்
நான்காவது மாடியில் உள்ள பொது கழிவறையில், வழக்கமான கழிவறை
நீக்கப்பட்டு 18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிவறை சில மாதங்களுக்கு முன்
நிறுவப்பட்டது. இத்தாலிய கலைஞர் மவுரிசியோ கேட்டலன் பணியில் இருந்து ஓய்வு பெறும்
முன் தனது இறுதி படைப்பாக இதனை உருவாக்கியிருந்தார். கழிவறை நிர்மாணிக்கப்பட்டதும்
அதனை பார்வையிடுவதற்கு மட்டும் பார்வையாளர்கள் அனு மதிக்கப்பட்டனர். இந்த சூழலில்
இந்த கழிவறையை பொது பயன்பாட்டுக்கும் அருங் காட்சியகம் திறந்துவிட்டுள்ளது.
இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
கழிவறை கதவுக்கு வெளியே பாதுகாவலர் ஒருவர் நிறுத்தப்
பட்டுள்ளார். இதை பயன்படுத்து பவர் யாரேனும் தங்கத்தை சேதப்படுத்தி எடுத்துச்
செல்ல முயற்சிக்கிறார்களா என்பதை அவர் கவனித்துக் கொள்கிறார்.
0 comments:
Post a Comment