ராம்குமாரின்
இறப்புச் செய்தியை அடுத்து
சோகத்தில்
மூழ்கியது மீனாட்சிபுரம் கிராமம்
புழல் சிறையில் நேற்று மாலையில் மின்கம்பியை கடித்து
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவ லால், மீனாட்சிபுரம்
கிராமத்தில் உள்ள அவரது தந்தை பரமசிவன், தாயார்
மேரிபுஷ்பம், சகோதரிகள் மதுபாலா, காளீஸ்வரி ஆகியோரும், அந்த
கிராமத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். ராம்குமாரின் வீட்டில் ஏராளமான உறவினர்கள்
திரண்டு அழுது புலம்பினர். அவரது வீடு அமைந்துள்ள தெரு முழுக்க உறவினர்களும், கிராம மக்களும் திரண்டனர்.
ராம்குமாரின் இறப்புச் செய்தியை அடுத்து மீனாட்சிபுரம்
கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ராம் குமாரின் வீட்டின்முன் திரண்ட அப்பகுதி
மக்கள், சுவாதி கொலை வழக்கை முடிப்பதற்காக, ராம் குமாரை கொலை செய்துவிட்டனர் என குற்றம்சாட்டினர்.
ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியிருப்பதாவது:
ராம்குமாருக்கு சுகர் அதிகமாகி விட்டதால் மருத்துவமனைக்கு
கொண்டு செல்வதாக புழல் சிறையில் இருந்து சிறைத்துறை அதிகாரிகள் மாலை 4.40 மணிக்கு தகவல் தெரிவித்தனர். வேறு எந்தத் தகவலையும்
அவர்கள் கூற வில்லை. ஆனால், அடுத்த 1 மணி நேரத்தில்
அவர் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி
அடைந்தேன். பொலிஸார் எதையும் கூறவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ராம்குமாரின்
இறப்புச் செய்தியை கேட்டு மயக்கமடைந்துவிட்டனர்.
ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார்
சொல்வதை ஏற்க முடிய வில்லை. ராம்குமார் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அவரை
கொன்றுவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியதும், அவரை அறியாமலேயே
கதறி அழுதார். மேற்கொண்டு அவரால் எதையும் பேச முடியவில்லை.
என் மகனை கொலை செய்து விட்டனர் என, ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறி அழுதபடி தெரிவித்தார்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை
என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்து வந்தனர். வழக்கை சிபிஐ விசாரணைக்கு
மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
0 comments:
Post a Comment