பாசிக்குடா கடலில் பிள்ளைகள் மாயம் :

துயரம் தாங்காமல் தாய்,தந்தை இருவரும் தற்கொலை


பாசிக்குடா கடலிலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடல் அலையினுள் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் அறிந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை(19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளைகளை இழந்த துக்கம் தாங்காமலே இவ்விருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்று கடலில் நீராடச்சென்ற பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் வயது (20) மற்றும் அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் வயது (18) ஆகியோர் கடலில் காணமல்போயிருந்தனர்.

இதுவரை அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்படவில்லை எனவும் அதேவேளை காப்பற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top