ஏறாவூர் இரட்டைக் கொலையின் கொலையாளிகளை
அடையாளம் காண்பதற்குதவிய சி.சி.ரி.வி. காணொளி
ஏறாவூரிலுள்ள முக்கியஸ்தர் ஒருவரின் முகநூல்
பக்கத்தில் சி.சி.ரி.வி. காணொளி மற்றும் அதன் புகைப்படம் என்பன கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்டது. இதனைப் பார்த்து அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் அதில் அந்த முக்கியஸ்தர் கோரியிருந்தார்.
இந்தக் சி.சி.ரி.வி. காணொளிப் புகைப்படத்தை இரண்டு மணித்தியாலயங்களே குறித்த முக்கியஸ்தர் தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்து விட்டு அதை மீள எடுத்து விட்டதை அறிந்த சிலர் குறித்த சந்தேக
நபர் தொடர்பான தகவல்களை ஏறாவூர் பொலிசாருக்கும் புலனாய்வுப் பொலிசாருக்கும் இரகசியமாக
வழங்கியதை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(11.9.2016) இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நிலவி வந்த நிலையில் நேற்று முன் தினம் 17 ஆம் திகதி சனிக்கிழமை இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யபட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின் கொலையாளிகளை கண்டுபிடிக்க இந்தக் கொலை இடம்பெற்ற வீடு அமைந்திருக்கும்
பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி. காணொளி பெரிதும் உதவியாக இருந்துள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்றிரவு சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளில் கொலை இடம்பெற்ற வீட்டை அண்மித்துள்ள வீதியில் பலமுறை செல்லும் காட்சி இந்த வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மர்மம் ஏறாவூரில் நிலவி வந்த நிலையில் ஏறாவூரிலுள்ள முக்கியஸ்தர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இந்த சி.சி.ரி.வி. காணொளி மற்றும் அதன் புகைப்படம் என்பன கடந்த வெள்ளிக்கிழமை (16) பதிவேற்றப்பட்டது. இதனைப் பார்த்து அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும் அதில் அந்த முக்கியஸ்தர் கோரியிருந்தார்.
இந்தக் சி.சி.ரி.வி. காணொளிப் புகைப்படத்தை இரண்டு மணித்தியாலயங்களே குறித்த முக்கியஸ்தர் தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்து விட்டு அதை மீள எடுத்து விட்டார்.
இதை பார்வையிட்ட ஏறாவூரைச் சேர்ந்த சிலர் குறித்த சந்தேக நபர் தொடர்பான தகவல்களை ஏறாவூர் பொலிசாருக்கும் புலனாய்வுப் பொலிசாருக்கும் இரகசியமாக வழங்கினர்.
இதையடுத்து குறித்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணையை துரிதப்படுத்திய ஏறாவூர் பொலிசார் சந்தேக நபருக்கு வலை விரித்தனர். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment