ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு தடை
சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று மாலை, சென்னை புழல் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற இருந்தது. இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி அவரது வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும். பிரேத பரிசோதனையின் போது, ராம்குமார் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை மதியத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மனுவில், ராம்குமார் பெற்றோர் தரப்பிலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்த மனு பிற்பகல் 2.15க்கு விசாரணைக்கு வர இருப்பதால், ராம்குமார் உடலை பிரதே பரிசோதனை செய்ய தடை விதித்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்த மாஜிஸ்திரேட் விசாரணை துவங்கியது. சிறையில் ராம்குமார் உடனிருந்தவர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனை மற்றும் ராம்குமார் மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த உள்ளார்.
ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவ
சவ கிடங்கில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்
0 comments:
Post a Comment