இராணுவத்தினருடனான
பேச்சு தோல்வி
செயற்கை
அவையவங்களை வீதியில் போட்டு
போராட்டத்தில் குதிப்பு
தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு போராடத்தில்
குதித்துள்ள அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன
ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும்
தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போரின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற இராணுவ
வீரர்கள் தமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு வலியுறுத்தி இரண்டாவது நாளாக மீண்டும்
போராட்டங்களை இன்று முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் முதல் புறக்கோட்டை ஒல்கொட்
மாவத்தையில் போராட்டத்தை ஆரம்பித்த ஓய்வுபெற்ற படையினர் ஜனாதிபதி செயலக பிரதான
வாயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போரில் அங்கவீனமான இவர்கள் தமது செயற்கை அவையவங்களை
வீதியில் போட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களை அகற்ற
முடியாது ஜனாதிபதி பாதுகாப்புப் படையினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அவையங்களை இழந்த படையினரை, பலத்தை பிரயோகித்து அகற்ற நடவடிக்கை எடுத்தால்
அது ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும்
எதிராக சிங்கள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை தோற்றுவித்துவிடும் என்பதால்
ஜனாதிபதி பாதுகாப்புப் படையினர் முன்னாள் படையினர் விடயத்தில் எந்த நடவடிக்கையும்
எடுக்காது பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்வாறான போராட்டங்களை இராணுவ வீரர்கள்
தவிர்த்து ஏனையவர்கள் நடத்தியிருந்தால் அவர்கள் மீது அதிகபட்ச படைப் பலம்
பிரயோகிக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பார்கள்.
குறிப்பாக ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பிரதேசத்திற்குள்
நுழைவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது வழமை என்பதும்
இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
0 comments:
Post a Comment