அமைச்சர்ர ரவூப் ஹக்கீமின்
வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேசத்தில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே! இனியும் நாங்கள் உங்களை
நம்பத் தயாரில்லை.
முஸ்லிம்
மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் ரவூபே எமது சாய்ந்தமருது மண்ணுக்கு வராதே!
பொய்! பொய்!!
பொய்!!! நான் சொல்வதெல்லாம் பொய் இப்படிக்கு ரவூப் ஹக்கீம்.
எங்கே எமது நகர சபை? எம்மை ஏமாற்றிய ரவூப் ஹக்கீமே வராதே!
என்பன போன்ற வாசகங்கள்
ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் காணப்படுகின்றன
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே அமைச்சர் ஹக்கீம் இன்று பிற்பகல் இங்கு வருகை தரவுள்ளார்.
கடந்த காலங்களில் இதற்காக பல கோடி ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை 16 கோடி 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் .காங்கிரஸ். அரசியல்வாதிகள் பகற்கொள்ளையடிப்பதற்காக செய்யப்படும்
எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதி, பெரிய பள்ளிவாசல், உல் வீதிகள் உட்பட பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படவிருந்த தோணா அபிவிருத்திக்கான பெயர்ப்பலகையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
.









0 comments:
Post a Comment