திரை உலகில் அதிர்ச்சி:
பிரபல மலையாளர் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ரேகா மோகன் திருச்சூரில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான ரேகா மோகன் முன்னணி நடிகர்களான மம்மூட்டி (உதயனபலகன்) மற்றும் மோகன் லால் (யாத்ராமொழி) ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் டுபாயில் வேலை பார்த்து வருகிறார். திருச்சூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரேகா மோகனை, அவரது கணவரால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அப்பகுதி காவல்துறையை தொடர்பு கொண்ட அவர், ரேகா மோகனை தொடர்பு கொள்ள முடியாதது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரேகா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, அவரது வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, ரேகா மோகன் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
ரேகா மோகன் உடல் கண்டு எடுக்கப்பட்ட வாடகை குடியிருப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் குடியேறி இருக்கிறார்என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment