சவூதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்
அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக

2 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறதாம்!

வூதி நாட்டின் முதன் மன்னர் அசீஸ் ஆனால் அவர் கிங் அப்துல்லாசிஸ் என பரவலாக அழைக்கப்பட்டார். சவூதி அரேபியாவை வளம் கொழிக்க நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் முழுக்க பெற்றோலின் தேவை அதிகமானதை, பயன்படுத்தி பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார். இவருக்கு மொத்தம் 17 மனைவிகள் 36 குழந்தைகள்.

இவருடைய மகனான கிங் சாத்துக்கு மகன்கள் மட்டும் மொத்தம் 53 பேர். சவூதி அரேபியாவில் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது நாட்டின் மன்னராக இருப்பவர் கிங் சல்மான், அதாவது அப்துல்லாஹ் அசிஸ் அவர்களுக்கு 25 வது குழந்தை இவர் தான். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்துள்ளார்.

தற்போது நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள் இருக்கின்றனர். ராஜ குடும்பத்துக்கு இப்போது கிங் சல்மான்தான் தலைவர்.
தற்போது சவூதியே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றன. இதற்கிடையே சவூதி அரச குடும்பத்தினர் சுகபோக வாழ்க்கையில் வாழ்வதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி அரச குடும்பத்தினர் சுவிஸ் வங்கியில் பணம் போடுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஆடம்பரப் படகுகளில் உல்லாசமாக வலம் வருகின்றனர் என்ற தகவலும் வெளிவரும்.

சவூதியின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் முழுவதுமே சவூதி அரசக் குடும்பத்தினர் செலவுக்காகத்தான் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதாவது தினமும் 10 லட்சம் பீப்பாய்கள் குரூட் ஆயில் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் செலவுக்காக ஒதுக்கப்படுகிற்தாக தகவல்.

அரசரின் நேரடி மகனுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மாதம் ஒன்றுக்கு செலவுக்காக வழங்கப்படுகிறதாம். பேரக்குழந்தைகளுக்கு மாதம் 8 ஆயிரம் டொலர்கள் கிடைக்குமாம்.

அரச வாரிசுகளுக்குத் திருமணம் நடந்தால் 3 மில்லியன் டொலர்கள் வரை அரண்மனைக் கட்டிக் கொள்ள திருமணப் பரிசாக வழங்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி இது.

சவூதி அரேபியாவின் மொத்த பட்ஜெட் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தான் எனவும் அதில், 2 பில்லியன் டொலர்கள் அரசக் குடும்பத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது என கூறியுள்ளது.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிலும் முன்னுரிமை. அரசு துறைகளில் நல்ல பணிகள் ஒதுக்கப்படும், நிர்வாக ரீதியிலான பதவிகள் வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்களில் கௌரவத் தலைவர்கள் பதவியில் இருப்பார்கள். அதில் இருந்து படிகள் கிடைக்கும். மற்றபடி செல்போன் பில்லில் இருந்து சவூதி ஏர்லைன்சில் நினைத்த நேரம் பயணம் செய்யும் வசதி வரை உண்டு எனவும் கூறியுள்ளது.
ஆனால் இந்தத் தகவல்களை சவூதி அரசின் செய்தித் தொடர்பாளர் மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே ஆண்டுக்கு 2.7 பில்லியன் டொலர்கள் செலவாகிறது என சொல்லப்படுவது மிகப் பெரிய தவறு என்றும் சவூதியின் அரச பரம்பரையின் அமைப்பைத் தெரிந்தவர்களுக்கு அதனை விளக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
நாட்டின் பல மாகாணங்களில் பூர்வக் குடிகள் உள்ளனர். அந்த பூர்வக்குடித் தலைவர்களுக்கு பெரும் தொகை போய் சேர்கிறது.


தற்போதைய சவூதி மன்னர் சல்மான் செலவுகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அமைச்சர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் மன்னரால் நியமிக்கப்படும் சவூரா கவுன்சில் உறுப்பினர்களின் சம்பளத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top