ஒபாமா இறுதி உரையின் போது
இராணுவ வீரர் ஒருவருக்கு..!
அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் இறுதி உரையின் போது இராணுவ வீரர் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான பராக் ஒபாமா கடந்த புதன் கிழமை Virginia பகுதியில் உள்ள Joint Base Myer-Henderson
Hall லில் இராணுவ வீரர்கள் முன் தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது இராணுவ வீரர் ஒருவர் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த வீரரை படை வீரர்கள் தூக்கலாமா, வேண்டாமா என்பது போல் செய்வதறியாமல் நின்றுள்ளனர். ஆனால் மயக்கமடைந்த வீரருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வரவில்லை.
காரணம் இறுதி உரையின் போது இராணுவ வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயக்கமடைந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார், படைவீரர்கள் ஒன்றும் நடக்காதது போல் தங்கள் பணியைச் செய்துள்ளனர்.
அதற்கு முன்னர் ஒபாமா இறுதி உரையின் போது கூறுகையில், இராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகம் போன்றவைகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment