ஈரானில் 15 மாடி கட்டிடம் சரிந்தது:
தீயணைப்பு வீரர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி
30 பேர் மரணமடைந்திருக்கலாம் என அச்சம்
ஈரானில் 15 மாடி கட்டிடம் தீ பிடித்து பின்னர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிட விபத்தில் இடிபாட்டிற்குள்சிக்கி 30 தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருக்கிறது
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பழமை வாய்ந்த 15 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து விபத்துள்ளானது. இதனையடுத்து
200-க்கும் மேற்பட்ட தீயயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் தங்களது பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த கட்டிடம் திடீரென சரிந்து விழத் தொடங்கியது. கட்டிடம் விழுவதற்கு முன்பாகவே 38 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கட்டிட இடிபாட்டிற்குள் தீயணைப்பு வீரர்கள் அதிகமானோர் சிக்கிக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
1960-களில் கட்டப்பட்ட இந்த 15 அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு ஷாப்பிங் கடைகளும், துணிக் கடைகளும் இருந்தன. கட்டிடத்தில் தீ பிடித்தவுடன் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஜலால் கூறுகையில், கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே அதன்முகாமையாளரிடம் எச்சரித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment