அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு
சுவிற்சர்லாந்து ஜனாதிபதி பாராட்டு
வலுவான இலங்கையை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் காட்டும் ஆர்வத்தை சுவிற்சர்லாந்து ஜனாதிபதி திருமதி டொரிஸ் லெதாட் பாராட்டியுள்ளார்.
சமாதானம் நிறைந்த சுபீட்சமான இலங்கையொன்றை அமைப்பதற்கு தற்போதைய சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு சுவிற்சர்லாந்து ஜனாதிபதி திருமதி டொரிஸ் லீலெதாட் ( Doris Leuthard ) பாராட்டியுள்ளார்.
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் ஜனநாயக மற்றும் நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை அவர் பாராட்ட வேண்டுமென்றார். சமகால அரசாங்கம் இலங்கையின் எதிர்காலத்திற்காக முன்னெடுக்கும் பரந்த வேலைத்திட்டத்தை சுவிற்சர்லாந்து ஜனாதிபதி பாராட்டினார்.
இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்திற்கு இடையிலான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் உறுதி செய்யப்படும் என்றும் இதற்காக இலங்கைக்கு ஆகக்கூடுதலான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சுவிற்சர்லாந்து தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிற்சர்லாந்தை கேந்திரமாகக்கொண்ட நெஸ்லே போன்ற நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட முதலீடு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விடயங்களைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை தொடர்பில் சுவீடன் மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வலிமை மிக்க இலங்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேசிய வேலைத்திட்டத்தை பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இணக்கப்பாட்டு அரசாங்கம் இதுவரை நிறைவேற்றிய வெற்றிகரமான நடவடிக்கை குறித்தும் பிரதமர் இதன் போது சுவிற்சர்லாந்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு மாநாடொன்றை சுவிற்சர்லாந்தில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment