15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்த பெண்
78 வயதிலும் ஆரோக்கியம் என்று கூறுகின்றார்!!
Try
my sand-wich! Sprightly Indian woman, 78, says eating SAND is key to her good
health - and reveals she nibbles on her house if she ever runs out
·
An
elderly woman from India has eaten 2kg of sand everyday for 63 years
·
Kusma
Vati, 78, started eating sand when she was 15 and scours her city for it
·
She
says she if she can't find any she will chew on walls in her house to get her
fix
·
Kusma
says she has never seen a doctor in her life and owes it to her sand eating
இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில் இருந்து மணல் மற்றும் கிராவல் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை என்பது தான் ஆச்சரியமே.
இது குறித்து குஸ்மாவதி கூறுகையில்,
தான் கடந்த 63 வருடங்களாக மண் மற்றும் கிராவல் போன்றவற்றை தான் சாப்பிட்டு வருகிறேன். இதைத் தான் விரும்பி உண்ணுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மணல் மற்றும் கிராவல் உண்ணுவதால் தனக்கு வயிற்று வலியோ மற்றும் பல் வலியோ போன்றவை வந்ததில்லை என்று கூறியுள்ளார். தன்னால் கடினமான கல்லை கூட கடித்து சாப்பிட முடியும், அதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறியுள்ளார்.
பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் அனுதினமும் 2 கிலோ மணல் சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார். இது நாள் வரை அவர் மருத்துவரை சந்தித்ததே கிடையாது என்றும் தன்னுடைய இந்த ஆரோக்கியதிற்கு மணல் தான் காரணம் என கூறியுள்ளார்.
அவர் இதை தன்னுடைய 15 வயதில் சாப்பிட ஆரம்பித்ததாகவும், அப்போது வயிறு வலித்ததாகவும், அதன் பின்னர் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் மணல் சாப்பிடுவதைப் பார்த்து தன் பேரக்குழந்தைகள் மணல் விரும்பி ஆகிவிட்டதாகவும், இது ஒரு போதை என்று தன்னை மருத்துவமனைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். தான் நன்றாக இருக்கிறேன், தான் ஏன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு மணல் மற்றும் கிராவல் தான் காரணம் என்று அடித்து கூறியுள்ளார் குஸ்மாவதி.
0 comments:
Post a Comment