நாடாளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை
225 இலிருந்து 240 ஆக அதிகரிப்பு?
தற்போதைய
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225இலிருந்து 240ஆக அதிகரிக்கவிருப்பதாக அறியமுடிகிறது. அதனடிப்படையில், எம்.பிக்களின் எண்ணிக்கை
15ஆல் அதிகரிக்கப்படவிருக்கின்றது. அ
தேர்தல்கள்
எல்லை நிர்ணயக்
குழுவின் பரிந்துரைகளுக்கு
அமைவாக, இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதற்கு
மேலதிகமாக, மாநகர சபைகள், நகர சபைகள்
மற்றும் பிரதேச
சபைகள் உள்ளிட்ட
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும்
4,250 இலிருந்து 8,500 வரையிலும் அதிகரிப்பதற்கான
யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக
அந்தத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தேர்தல்கள்
எல்லை மற்றும்
தேர்தல்கள் முறைமை தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக,
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்
பைஸர் முஸ்தபாவினால்
நியமிக்கப்பட்ட அசோக பீரிஸ் தலைமையிலான குழுவின்
அறிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment