உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை
பிரதமர் தலைமையில் எதிர்வரும் 9ம் திகதி கூட்டம்
மத்தள விமானநிலையம் சொந்த நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டன
உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சிமன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் அறிக்கையில் 3 அங்கத்தவர்கள் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளமை தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே சுகாதா போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டதுடன் அறிக்கையை பொறுப்பேற்பதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா நாட்டில் இல்லை என்று குற்றஞ்சாட்டப்படுவது குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தலையிட்டு அரசாங்கம் பின்வாங்கவில்லை , மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் தம்மை வலுப்படுத்துவதற்காகவே உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
மத்தள விமானநிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
தமது சொந்த நலனை கருத்தில் கொண்டு இவை அமைக்கப்பட்டன. இதற்கு 60கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. மாதாந்தம் 350 மில்லியன் ரூபா இதற்காக பொதுமக்களே செலுத்தவேண்டியுள்ளது. சீன அரசாங்கம் இவற்றை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் கூட்டுமுயற்சியில் இணைந்து செயற்பட முன்வந்துள்ளது. இது குறித்தும் பலர் விமர்சித்;துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் சுதந்திர வர்த்தக வலயத்தை அமைத்;து இ;ந்த பிரதேசத்தை அரசாங்கம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இன்று இதனை விமர்சிப்போர் இதேபோன்றே அரசியல் யாப்பு 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது நாடே தீப்பற்றி எரிந்தது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கம்பன்பில போன்றோர் மாகாணசபை விவசாயக்கொள்கை வகுக்கப்படவேண்டும் என்று இன்று குரல் எழும்புகின்றார்.
நாட்டில் சிறந்த விடயங்களை முன்னெடுத்தால் அதற்கெதிராக செயற்படுபவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதே போல சீனாவுடனான இந்த சுதந்திர வர்த்தக தொழில்முயற்சிகளை விமர்சிப்போர் இந்த சமகால அரசாங்கத்திலும் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment