ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில்
பிரச்சினை உண்டு
– அமைச்சர் ராஜித சேனாரத்ன
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் பிரச்சினை உண்டு என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற் 2017ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு விடயத்தில் பிரச்சினைகள் உண்டு. ரவிராஜ் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். அவரது மெய்க்காவலர்களும் தாமாகவே சுட்டுக்கொண்டனர் என்ற நிலைப்பாட்டையே இந்த தீர்ப்பின் மூலம் காணப்படுவதாகவே அமைச்சர் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் தற்பொழுது இதுதொடர்பில் மேன்முறையீட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் :
பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலைத்தீர்ப்பை அடுத்து வெளிநாட்டு நீதிபதிகளின் தலைமையில் இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
அமைச்சர் :
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் தலைமையில் நீதிவிசாரணை இங்கு இடம்பெறாது. அவர்கள் நீதிபதிகளாக இங்கு அமரமுடியாது. ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியம். ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் உடன்பட்டுள்ளது. நல்லிணக்கம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்தும் அமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார்.
செய்தியாளர் :
தற்பொழுது உள்ள ஊழல் நிதிமோசடி தொடர்பாக விசாரணை செய்யும் எவ்சிஐடி ரத்து செய்யப்படுமா?
அமைச்சர் :
இதற்கென விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும் கிரிமினல் ஜஸ்டிஸ் கமிஷன் என்ற புதிய ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது. இதில் எவரும் முறைப்பாடுகளை முன்வைக்கமுடியும்.
முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடியதா என்பதனை ஆராய்ந்து விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment