ஜெயலலிதாவின் கார், அறையை பயன்படுத்த
சசிகலாவுக்கு கட்சியினர் கடும் எதிர்ப்பு
'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் களையும், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது அறையையும், சசிகலா பயன்படுத்தக் கூடாது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை, போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, கோடநாடு பங்களா, ஐதராபாத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில், அவருக்காக, ஆறு சொகுசு கார்கள் உள்ளன. அவற்றை, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில், காட்சிப்பொருளாக வைக்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆரின்,
அம்பாசிடர் கார்,தற்போது, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அந்தக் காரை, தினமும் துடைத்து, 'ஸ்டார்ட்' செய்து வைப்பது வழக்கம். அவரது அறையை, கண்ணாடி கதவு போட்டு, 'சீல்' வைத்து, பொது மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டை, அ.தி.மு.க., தலைமை அலுவலக முதல் மாடியில், 18இருக்கைகள் கொண்ட, எம்.ஜி.ஆரின் அறை உள்ளது. அதை யாரும் பயன்படுத்த, ஜெயலலிதா அனுமதிக்க வில்லை. பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா வின் அறை, கீழ் தளத்தில் உள்ளது. அந்த அறையை, பொதுச்செயலராகி உள்ள சசிகலா, பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள் ளார். அந்த அறையை, எம்.ஜி.ஆர்., அறையைபோல், வேறு யாரும் உபயோகிக்க அனுமதிக்காமல், கட்சி தொண்டர்கள் பார்வையிடும் வகையில், கண்ணாடி கதவுகளை அமைத்து, பாதுகாக்க வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 comments:
Post a Comment