சுகாதார தகவல் தொடர்பான தேசியக் கொள்கை
அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை அரசு அதன் இலவச குணப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள் மூலம் மக்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது.
சுகாதார சேவை வழங்கலானது தகவல்களின் அடிப்படையில் அமைந்தது. அதாவது, நோய் கண்டறிதல் தொடக்கம் அதனை குணப்படுத்தல் மற்றும் நிர்வாகம தொடர்பிலான முடிவுகளை எட்டுதல் என்பன யாவும் சுகாதார தகவல்களின் பாவனையிலேயே தங்கியுள்ளது.
எனினும் குறித்த தகவல்களில் பல்வேறு வகையான குறைப்பாடுகள் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமே. இதனைக்கருத்திற் கொண்டு தேசிய சுகாதாரக் கொள்கையுடன் இணக்கமாக அதன் நோக்கங்களை எட்டும் விதத்தில் பரந்துபட்ட ஒருங்கிணைந்த, தருணத்திற்கேற்ற நெகிழ்ச்சியான, செலவுக் குறைந்த, நீடித்துக் நிலைக்கக் கூடிய சுகாதார தகவல் முறையொன்றை அமுல்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் குறித்த தகவல் முறைமையை இலத்திரனியல் தகவல் முறைமையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'சுகாதார தகவல் தொடர்பான தேசிய கொள்கை' சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment