தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க
ஒருங்கிணைப்பு அதிகாரசபையினை ஸ்தாபிப்பதற்கு
சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றில் அதிகபட்சமான முதலீடுகளை இடும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தேசிய நெறிப்படுத்தலின்றி இரட்டிப்பு வேலையை ஏற்படுத்திய சுமார் 21 அமைச்சுத் துறைகளினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற ஆங்காங்கு சிதறியுள்ள 80 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வசதிகள் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்காக தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் ஸ்தாபிப்பது தொடர்பில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment