கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அரசின் கைப்பொம்மையா?

சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் உபவேந்தர் அரசின் கைப்பொம்மையா? என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய நிலையில் வீதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருதைக் கண்டித்தும் மாணவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பல்கலைக்கழகத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும், உபவேந்தர், அரசின் கைப் பொம்மையா?, சீ.சீ.ரி.வி கமரா அகற்றப்பட வேண்டும், புலனாய்வாளர்கள் பல்கலைக்கழத்தினுள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், மாணவர்கள் விடுதலைப் புலிகளோ, பயங்கரவாத அமைப்போ அல்ல போன்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எந்தவொரு முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையில் நம்பிக்கையில்லை. அதனால் குறித்த பிரச்சினை தொடர்பாக எதிர்காலத்தில் பல்கலைக்கழக மானியம் வரை கொண்டு செல்வதற்கு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து ஆரம்பித்த மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடம் வரை சென்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top