அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள்மார்கள்
முதன்முதலாக வெள்ளை மாளிகைக்கு
வருகை தந்த அனுபவங்கள்!
Rare pictures show Malia and Sasha Obama
touring the White House with Bush twins in 2008
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தற்போது அவர் தனது குடும்பத்தாருடன் வெள்ளை மாளிகையிலிருந்து சென்றுள்ளார்.
அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெற்று உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட மனிதர். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் உலகின் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதியாகிவிட்டார்.
ஒபாமாவிற்கு சாசா மற்றும் மெலியா என மகள்கள் இருக்கின்றார்கள். இதுவரை வெள்ளை மாளிகையில் இளவரசிகளாக சுற்றி வந்தவர்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி உள்ளார்கள்.
இவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக வெள்ளை மாளிகைக்கு வருகைத்தந்து பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அப்போதைய காலக்கட்டத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஸ்ஸின் மகள்களான ஜன்னா மற்றும் பர்பரா புஸ் ஆகியோர் இந்த மாளிகையை அவர்களுக்கு சுற்றிக்காட்டியுள்ளனர். அவ்வாறு வந்தவர்கள் மாளிகையைப்பார்த்து வியப்படைந்ததுடன், அதிலேயே வாழ்ந்து தற்போது வெளியேறி உள்ளார்கள்.
ஒபாமாவின் புதல்விகள் வெள்ளை மாளிகைக்கு வரும்போது மிகவும் சிறியவர்களாக இருந்துள்ளார்கள். ஆனால் அதை விட்டு வெளியேறும் போது சாசா மற்றும் மெலியா இளம் யுவதிகளாக சென்றுள்ளார்கள்.
இதை நினைவுப்படுத்தும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
0 comments:
Post a Comment