தேசிய பாடசாலைகளில் காணப்படும்
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக
பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரரப்பட்டுள்ளன
நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி
மூலம் க.பொ.த.(உ/த) தரங்களில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை
ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் உத்தரவின்படி
தகுதியானவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
கல்வித் தகைமை: இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்புக்கமைய அன்று
பல்கலைக்கழக மானிய. ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில்
அல்லது பல்கலைக்கழக மானிய. ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
நிறுவனத்தில் பட்டத்தைப் பெற்றிருக்க் வேண்டியதுடன், விண்ணப்பிக்கும் பாடமானது பட்டப்படிப்பில்
பிரதான பாடமாகக் கற்றிருப்பது கட்டாயமானதாகும்.
வயதெல்லை: 13.02.2017 ஆம் திகதியன்று 18 வயதை விடக் குறையாது
மற்றும் 35 வயதை விட மெற்படாது இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இறுதித் தினம்: 2017 பெப்ரவரி 13
ஆம் திகதி
விண்ணாப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும்
வெளிநாட்டு பரீட்சைக் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ.இல 1503, கொழும்பு.”
வெற்றிடமுள்ள பாடங்கள்:
குறிப்பு: மேலதிக விபரங்களுக்கு இன்று 2017.01.20 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையைப்
பார்த்து அறிந்து கொள்ளமுடியும்
0 comments:
Post a Comment