மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு

பதில் கடமை அடிப்படையில் கல்விப்பணிப்பாளராக

கனகசூரியம் அகிலா நியமனம்

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையை சேர்ந்த கனகசூரியம் அகிலா என்பவர் பதில் கடமை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய . கே. சத்தியநாதன் ஓய்வு பெற்றச் சென்ற பின் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந் இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்து உடனடியாக இந்த நியமனத்தைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்படி பதவிற்கான நேர்முகப்பரீட்சை விரைவில் இடம் பெறும் எனவும் இதன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இப் பதவி வெற்றிடமாக இருப்பதையும் இதனால் கல்வி வலயம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவித்ததையடுத்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top